Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2021 22:28:23 Hours

கந்தளாயில் 150 தொற்றாளர்களை அனுமதிக்க கூடிய இடைநிலை பராமரிப்பு நிலையம் நோய்களை

நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருவம் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எந்தவொரு அவசரநிலைக்கும் முகம் கொடுக்கும் நோக்கில் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 22 வது பிரிவு மேஜர் ஜெனரல் சமந்த சில்வா ஆகியோரின் வழிகாட்டலில் கந்தளாய் இளைஞர் நிலையத்தை ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக மேம்படுத்தினர்.

கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதலின் படி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் தொற்றின் அதிகரிப்பினால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைகளை எதிர்நோக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இதுபோன்ற பல இடங்களை மாற்றினர்.

மேம்படுத்தப்பட்ட கந்தளாய் இளைஞர் நிலையம் 150 கட்டில்களைக் கொண்டுள்ளது. இதனை அமைப்பதற்கு திருகோணமலை மாவட்ட செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.