09th May 2021 19:10:03 Hours
கொவிட் 19 பரவலைதட தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அளித்த அறிவுறுத்தல்களுக்கு இணங்க, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரதிபுரம் தனிமைப்படுத்தல் நிலையத்தை அனைத்து அவசர மருத்துவ வசதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் சகிதம் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைத்துள்ளனர்.
கொவிட் -19 தொற்றுநோயின் தற்போதைய 3 வது அலைக்கு ஒருங்கிணைந்த பதிலை வழங்குவதற்கும், திறனை வலுப்படுத்துவதற்கும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் நேரடி மேற்பார்வையில் சில நாட்களில் இராணுவத்தினால் மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் செயற்பாட்டு ஆரம்பம் வியாழக்கிழமை (6) கிளிநொச்சி தளபதி மற்றும் சில சுகாதார அதிகாரிகள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது மேலதிக முன்னேற்றத்திற்கான தேவைகள் மற்றும் துணைச் சேவைகள் குறித்து வைத்திய அதிகாரிகளுடன் தளபதி கலந்துரையாடினார்.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.என்.சரவணபவன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுகந்தன், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க, 571 பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக வெலகெதர , கேணல் பொது பணி மற்றும் கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.