09th May 2021 18:15:37 Hours
கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, வழிகாட்டுதல்களின்படி நமது சமூகத்தின் கொவிட் நபர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் அதிகரிப்பிற்கு முகம் கொடுக்கும் வகையில் அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரியினை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் இடைநிலை பராமரிப்பு நிலையமாக படையினரால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
400 கட்டில்களைக் கொண்ட இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் -19’ வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் வீரசூரிய வெள்ளிக்கிழமை (7) மேற்பார்வைக்காக விஜயம் மேற்கொண்டார்.