Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2021 18:03:04 Hours

521 பிரிகேட் படையினர் யாழ்ப்பாண வீதியோரகள் சுத்தம்

டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுவதற்கும், சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் புதர்களை அகற்றுவதற்குமான சிரமதான பணி யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 52வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார்.

மேலும், சமூக நல அடிப்படையிலான இந்த திட்டம் 521 வது பிரிகேட்டின தளபதி கேணல் மகேன் சல்வதுராவின் ஆதரவுடன் அச்சுவேலி - பலாலி பாதையின் 8.5 கி.மீ தூரம் 11 வது விஜயபாகு காலாட் படை படையினரால் சுத்தம் செய்யப்பட்டது.

குறித்த பகுதிமக்களும் புத்தூர் பிரதேச சபையின் ஊழியர்களும் இந்த திட்டத்திற்கு பங்களித்தனர்.