Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2021 22:28:03 Hours

முல்லைத்தீவு படையினர் பொவிட் பரவலை கட்டுப்படத்துவதற்காக பொது இடங்களில் தொற்று நீக்கம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கொவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு முல்லைத்தீவு நகரம் மற்றும் அதன் அண்டிய பகுதிகளின் பொது இடங்கள் படையினரால் தொற்று நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, 592வது பிரிகேட்டின் 23 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் திங்கட்கிழமை (3) முள்ளியவளை நகரப் பகுதியின் பஸ் தரிப்பிடங்கள், நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் போன்றவற்றை தொற்று நீக்கம் செய்தனர்.

இதேபோல், 593 வது பிரிகேட்டின் 19 கெமுனு ஹேவா படையினர் செவ்வாய்க்கிழமை (4) கொக்கிலாய், கொக்குதொடுவாய், கர்நாட்டாகேணி மற்றும் செம்மலை பகுதிகளில் பொது மற்றும் தனியார் இடங்களில் தொற்று நீக்கம் செய்தனர். இந்த திட்டங்களை 59 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஜி. டி.சூரியபண்டார அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இதற்கிடையில், 641வது பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்கப் படை ன்ஹா, 23 விஜயபாகு காலாட்படை படை மற்றும் 642 வது பிரிகேட்டின் 17 (தொ) கஜபா படை மற்றும் 643 வது பிரிகேட்டின் 13 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படை என்பன செவ்வாய்க்கிழமை (4) ஒட்டுச்சுட்டான் பொதுப் பகுதியில் தொற்று நீக்கம் செய்ததுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

மேற்படி திட்டங்களை 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இதற்கிடையில் 681 வது பிரிகேட்டின் 7 கெமுனு ஹேவா படையினர் செவ்வாய்க்கிழமை (27) உடையார்க்கட்டு பொது பகுதியில் தொற்று நீக்கம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு திட்டங்களை நடத்தினர். இதேபோல், 682 வது பிரிகேட்டின் 6 வது இலங்கை பாதுகாவலர் படை மற்றும் 18 வது விஜயபாகு காலாட் படை என்பன புதுக்குடியிருப்பு பொது பகுதியில் தொற்று நீக்கம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு திட்டங்களை வெள்ளிக்கிழமை (30) மேற்கொண்டனர். இந்த திட்டங்களை 68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டார அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.

குறுத்த பகுதிகளின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களின் உத்தியோகத்தர்கள் இந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.