08th May 2021 18:17:36 Hours
தெற்கு நன்கொடையாளரிடமிருந்து கிடைத்த 5000 முகக் கவசங்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59வது படைப்பிரிவின் படையினர் திங்கட்கிழமை (3) பொது மக்களிடையே விநியோகித்தனர்.
59வது படைப்பிரிவின்சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி சொய்சாவின் ஒருங்கிணைப்பில் நுகேகொடையை சேர்ந்த திரு சுமனசிறி 5000 முகக்கவசங்களை நந்திககடல் பகுதி பொது மக்களிடையே விநியோகிப்பதற்காக 59வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜி.டி.சூரியபண்டாரவிடம் பரிசளித்திருந்தார்.
அதே தினத்தில்( 03) வைரஸ் குறித்த விழிப்புணர்வு திட்டத்தில் முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளி பேணல், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு படையினர் அறிவுறுத்தினர்.