08th May 2021 09:33:19 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் 'துரு மிதுரு - நவ ரட்டக்' எனும் விவசாய நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மாம்பழம், தேசிக்காய், மரமுந்திரி மற்றும் கொய்யா போன்ற 200 பழ மரக்கன்றுகளை நட்டாங்கண்ட 652 வது பிரிகேட் வளாகத்தில் அதன் படையினர் புதன்கிழமை (5) நாட்டினர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 65 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 652 வது பிரிகேட் படையினரால் அந்த மரங்களை நாட்டப்பட்டது. 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய ஹேரத், அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டத்தில் பங்கு கொண்டனர்