Header

Sri Lanka Army

Defender of the Nation

07th May 2021 14:43:15 Hours

மற்றுமொரு இடைநிலை பராமரிப்பு நிலையம் மதுரங்குலியில் திறப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் கொவிட் தடுப்பு பொறிமுறைக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மதுரங்குழி மெர்சி கல்வி வளாகத்தை இடைநிலை பராமரிப்பு நிலையமாக) மாற்றியுள்ளனர்.

தற்போதைய 3 வது அலையின் தாக்கத்தின் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்ைகயில் ஏற்படும் அதிகரிப்பின் போது தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14வது படைப்பரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாபா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் செவ்வாய்க்கிழமை (4) இடைநிலை சிகிச்சை நிலையத்தின் ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் 16 வது கஜபா படையினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் 143 பிரிகேட் தளபதி சுகாதார அதிகாரிகள் மற்றும் சில இராணுவ அதிகாரிகளுடன் அவசர கால தேவையின் போது செயற்பட வேண்டிய பொறிமுறை மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக ஒரு ஆழமாக கலந்துரையாடினார்.