Header

Sri Lanka Army

Defender of the Nation

07th May 2021 13:43:54 Hours

55 படைப்பிரிவு படையினர் பருத்தித்துறையில் கொவிட் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இலவச முககவசம் வழங்கல்

55 வது படைப்பிரிவின் 16 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 4 வது இலங்கை சிங்கப் படையினர் முறையே வியாழக்கிழமை (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) முறையே மந்திகை பகுதிகளில் கொவிட் -19 குறித்த விழிப்புணர்வு திட்டத்தை மேற்கொண்டனர்.

55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய மற்றும் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளி நடைமுறைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பிற நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தினர்.

இந்த திட்டம் மந்திகை வணிக வளாகம் , சந்தை பகுதிகள், வைத்தியசாலை வளாகம் மற்றும் பரபரப்பான நேரங்களில் பருத்தித்துறை நகரம் ஆகிய பகுதிகளில். திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் படையினரால் பொதுமக்களுக்கு முகக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டது.

பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் படையினருடன் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.