06th May 2021 18:19:10 Hours
கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு திட்டம் 641 வது பிரிகேட் தலைமையகத்தில் சனிக்கிழமை (1) தொடங்கியது.
கச்சிலைமடு மற்றும் மண்னங்கண்டல் பகுதிகளில் 14 வது இலங்கை சிங்கப் படையினர் 641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக ஜெயவர்தனாவின் வழிகாட்டுதலில் மண்னங்கண்டல் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊழியர்களுடன் இணைந்து திட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த திட்டம் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் அதன் மோசமான விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது. மேலும் முதன்மையாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டபப்பட்டது. கொவிட் 19 க்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் குறித்து பெரும்பாலான மக்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதும், இதுபோன்ற நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் காணப்பட்டது.