06th May 2021 17:41:45 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பூனானி புலதிசிபுர பிராண்டிக்ஸ் வளாகம் மற்றும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையங்கள் தொற்றாளர்களின் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாகவும் ஹிங்குராங்கொட வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நிலையமாக திங்கட்கிழமை (3) முதல் செயல்படவுள்ளது.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக- தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவசரகால தேவையின் பொருட்டு சுகாதார அமைப்புகளின் கொள்லளவினை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தளபதி மேஜர் ஜெனரல் வீரசூரிய குறுத்த நிலையங்களுக்கு கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அவற்றின் வசதிகள் மற்றும் உபகரணங்களின் கிடைப்பளவினை ஆராய்ந்திருந்தார்.