Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2021 22:03:19 Hours

143 வது பிரிகேட் படையினரால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தபோவெவ 143 வது பிரிகேட் படையினருக்காக பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு (ஒஸ்மோசிஸ்) நிலையம் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே அவர்களால் ஞாயிற்றுக்கிழமை (2). திறந்து வைக்கப்பட்டது.

படையினருக்கு சுத்தமான குடிநீர் இல்லாமை கண்டறியப்பட்டமையை அடுத்து 143 வது பிரிகேட் தளபதி மற்றும் அதன் படையினர் எடுத்த முயற்சியின் காரணமாக முகாமுக்கு சுகாதாரமான நீர் வழங்குவதற்காக இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்