05th May 2021 19:57:04 Hours
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 4 இராணுவ புலனாய்வுப் படையினர் கிளிநொச்சி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி, சாந்திபுரம் பகுதியில் சுமார் ரூபா 8 லட்சத்து பதினைந்தாயிரத்தை திங்கட்கிழமை (3) கந்தேச நபருடன் கைது செய்தனர்.
சந்தேகநபர் மற்றொரு நண்பருடன் இணைந்து கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தி சாந்திபுர பகுதியிலுள்ள ஒரு கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது கடைக்காரர் அருகிலுள்ள 4 இராணுவ புலனாய்வுப் படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து படையினர் குறித்த நபரினை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களின்படி கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் நெருக்கமான மேற்பார்வையில் இப்பகுதியில் சேவை செய்யும் படையினர் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல், மதுபானம் தயாரிப்பு , மணல் அகழ்வு மற்றும் வேறு கடத்தல் செயல்களுக்கு எதிரான அரசின் நசெயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.