06th May 2021 23:22:20 Hours
கொவிட்-19 அவசரகால தேவைகளுக்காக இராணுவத்தால் உருவாக்கும் பராமரிப்பு நிலையங்களின் படுக்கை விரிப்புகள், மற்றும் தலையணை உறைகளுக்குப் பயன்படுத்துவதற்காக லங்கா நேச்சர் பவர் & ரஃப் டி-ஷர்ட்ஸ் நிறுவனத்தின் மூன்று பேர் கொண்ட நிர்வாகிகள் குழு, கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இன்று (4) அவரது அலுவலகத்தில் சந்தித்து 7,800 மீட்டர் வெள்ளை பருத்தி துணியை கையளித்தனர்.
லங்கா நேச்சர் பவர் & ரஃப் டி-ஷர்ட்ஸ் நிறுவனத்தின் திரு. என்.எம். காலித், திரு. ஹுமைட் காலித் மற்றும் திரு.நபீல் காலித் ஆகியோர் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவத்தின் செயற்பாட்டினை பாராட்டியதுடன் தங்களது அன்பளிப்பின் அடையாளமாக ஒரு தொகை தணியினை ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் கையளித்தனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த இளம் வர்த்தகர்களுக்கு தேசத்தின் அவசரகால அவசியத்தை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் சரியான சிந்தனைக்கு நன்றி தெரிவித்தார். அத்தோடு அவர்களுக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக ஒரு நினைவு பரிசையும் வழங்கினார்.