03rd May 2021 18:16:26 Hours
கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், 1906 எனும் இலக்கத்திற்கு அழைக்குமாறு கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இராணுவம் கொவிட் -19 முழுவதும் சிகிச்சையளிப்பு மற்றும் மருத்துவமனைகள் சிகிச்சை மையங்களின் திறன் மற்றும் வசதிகள் மேம்படுத்துவதில் மும்முரமாக இருப்பதால் 1906 இலக்கத்தை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களை பொருத்தமான சிகிச்சைக்கு கொண்டு செல்ல உதவியை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்