Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd May 2021 21:50:26 Hours

இராணுவத் தளபதி திருமண நிகழ்வு ஒன்றில் பங்குபற்று வகையிலான புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவுவதை இராணுவம் மறுக்கின்றது

(ஊடக வெளியீடு)

திருமண நிகழ்வுகள் நடத்தும் தடை செவ்வாய்க்கிழமை (4) அமுலுக்கு வருவதற்கு சற்று முன்னதாக கொழும்பு ஹோட்டலில் தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்துக் கொண்டதாக திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்களுடன் சமூக வலைத் தளங்களில் பொய் செய்தி வைரலாக அனுப்பப்பட்டுள்ளதாக எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தளபதியின் சகோதரியின் மகள்மார் பாடசாலை செல்பவர்களாக இருப்பதால் குறித்த சமூக வலைத் தள செய்தியானது திரிபுபடுத்தப்பட்டதொன்று என இராணுவம் தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த பொய்யான சமூக வலைத்தள பதிவை பதிவிட்டவர் தனது தகவல் பிழையானது என அதனை அகற்றிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தீர்க்கமான தருணத்தில் பொறுப்போடு செயற்படுமாறும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து நமது நாட்டில் இந்த தொற்றுநோயினை ஒழிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு இராணுவம் நமது சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறது. (முடிவடைகிறது)