30th April 2021 18:48:08 Hours
இன்று காலை (1) நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1662 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1636 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள ஆவர். இதில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 329 பேரும், கொழும்பிலிருந்து 317 பேரும், கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 193 பேரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 797 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.
இன்று காலை (01) மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணி 90,637 இறந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் இனங்காணப்பட்டவர்களின் மொத்தம் 108,145 ஆகும். அவர்களில் 95,975 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 11,492 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 530 நோயாளிகள் பூரணமாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி இன்று காலை (01) நாட்டில் கொவிட் -19 இறப்பு எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை (01) நிலவரப்படி, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 113 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,519 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (01) காலை வரை குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசம், திட்டவெல்கம, கும்புக் கெட்டே நிரவிய மற்றும் நிக்கதலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் , ஆதிகாரிகொட, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் களுத்துறை மாவட்டத்திலும் கம்பாஹா மாவட்டத்தில் பொல்ஹேன ஹீரகுலகெதர களுஹங்கல அஸ்வென்னவத்தை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் பூம்புஹார், சுமைதாங்கிபுரம் (உப்புவெலி), மூதூர், கோவிலடி, லிங்கநகர், காவெட்டிகுடா மற்றும் சீனக்குடா கிராம சேவையாளர் பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இம்புலகட மற்றும் கடுதம்பே கிராம சேவையாளர் பிரிவுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் சிரிகெத கிராம சேவையாளர் பிரிவும். மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை, கலேவல மற்றும் தம்புள்ள பொலிஸ் பிரிவுகளும் தம்புள்ள பொருளாதார மையம். பல்லேக்கும்புர ,அளுகொல்ல கிராம சேவையாளர் பிரிவுகளும் மொனராகலா மாவட்டத்தில் வெல்லவாய நகரம், வெஹராயாய, கொட்டம்கம்பொக்கெ ரஹதங்கம, கல்அமுன மற்றும் எலமுல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.