Header

Sri Lanka Army

Defender of the Nation

28th April 2021 21:30:02 Hours

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாயம் திட்டம் - 2020-2025' க்கு இணங்க புரிதல், இன நல்லிணக்கம், தேசபக்தி சகவாழ்வு, பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஒரு புதிய திருப்புமுனையாக 359 தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணம் விடத்தல்பலை பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியானது 2021 ஓகஸ்ட் மாதம் 27 வரை யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லவின் மேற்பார்வையில் தொடரும்.

பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் நடைப்பெற்ற ஆரம்ப விழாவில் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. தனது உரையில் சிவில் வாழ்க்கையிலிருந்து இராணுவ வாழ்க்கைக்கு மாற்றும் செயல்முறையுடன் தொடங்கும் அடிப்படை இராணுவ பயிற்சியின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார். மேலும் பயிற்சி காலத்தில் பொறுப்புகள் ,ஒழுக்கம், நடத்தை, ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி நெறியானது நிச்சயமாக தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் இளைஞர்களை ஈர்க்கும் அதே வேளை அவர்களை தொழில்த்துறை வீரர்களாக மாற்றுவது, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உடல், மன மற்றும் தார்மீக ரீதியில் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இராணுவத்திற்கு புதிய வீரர்களை சேர்ப்பதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடங்கிய முதல் ஆட்சேர்ப்பு பாடநெறி இதுவாகும்.

தொடக்க நிகழ்வில் 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக விஜேசிரி, யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக பணிநிலை அதிகாரிகள், அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் விடத்தல்பலை பட்டாலியன் பயிற்சி பாடசாலையின் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.