27th April 2021 19:10:46 Hours
கொஸ்கம வழங்கல் கட்டளை தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறைந்த பங்குப்பற்றலுடன் வியாழக்கிழமை (8) வளாகத்திற்குள் சிங்கள் தமிழ் புத்தாண்டு விழாவை கடுமையான கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களுடன் கொண்டாடினர்.
வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கை வினோத அம்சங்கள் காணப்பட்டன.
பானை உடைத்தல், ஓழை பின்னல், (கிரீஸ்) சறுக்கு மரம் ஏறுதல், பனீஸ் சாப்பிடுதல், தேங்காய் துறுவுதல் போன்ற போட்டிகள் கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நடைப்பெற்றதுடன் அவை அன்றைய நிகழ்வுக்கு வண்ணத்தையும் வேடிக்கையையும் சேர்த்தன.
நாள் முழுவதும், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் ஏராளமான களிப்புடன் புத்தாண்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர், அனைத்து நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கும் விழாவின் முடிவில் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.