Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2021 18:56:15 Hours

தென் சூடானில் உள்ள இலங்கை படையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு

ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து தென் சூடானின் போர் நகர பகுதியில் உள்ள ஸ்ரீமேட் நிலை II மருத்துவமனையில் சேவையாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையினர் சமீபத்தில் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களின் கீழ் தென் சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை (UNMISS) தலைமையக வளாகம் மற்றும் அதன் அண்டிய பகுதிகள் மேற்கொண்டனர்.

பிரதேசத்திற்கான தளபதியின் மேற்பார்வையின் கீழ் ஐ.நா. குழுக்களுடன் இணைந்து ஶ்ரீமெட் படையினர் முழு தென் சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை தலைமையக வளாகத்தையும் புதர்களை வெட்டி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன்போது அங்கு கடி கொண்டிருந்த மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்திற்குச் சொந்தமான மஞ்சள் சொண்டு நாரைக் கூட்டத்திறகு உணவளித்து பத்திரமாக அருகிலுள்ள காட்டுப் பகுதிகளுக்கு விடுவித்தனர். அவற்றில் சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தன.

மேலும் ஶ்ரீமெட் படையினர் சதுப்பு நிலங்களில் குறைந்த நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பழங்குடி மீன் இனங்களை போர் நகரத்தின் பொதுப் பகுதியில் காணப்படும் பாதுகாப்பான நீர் வளங்களுக்கு அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தன. திட்டத்தின் இறுதி முழு பகுதியையும் பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக ஶ்ரீமெட் நிலை II மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினர்.