27th April 2021 19:06:38 Hours
இராணுவத் தளபதியின், 'துரு மிதுரு நவ ரட்டக்' எண்ணக்கருவுற்கு அமைவாக FYFA தொண்டர் அமைப்பு, படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள வீரர்கள் ஒன்றிணைந்து வெலிகந்த கவுதகல வனப்பகுதியின் அடர்த்தியைப் பெருக்கும் திட்டத்தினை ஆரம்பித்தனர்.
சனிக்கிழமை (24) கவுதகல வன மடாலயத்தில் வசிக்கும் தேரர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த மதிப்புமிக்க திட்டத்தின் முதல் கட்டமாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்ஷன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலநடதுக் கொண்டதுடன் FYFA தொண்டர் அமைப்பின் நிறுவனரும் பணிப்பாளருமான லசந்த நிமால் , 233 பிரிகேட்டின் தளபதி கர்ணல் வசந்த ஹேவகே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். FYFA தொண்டர் அமைப்பின் உறுப்பினர்கள், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் மற்றும் வெலிகந்த பகுதியின் ஏராளமான மாணவர்கள் கலந்துக் கொண்டு மூலிகை மற்றும் உள்நாட்டு மதிப்புள்ள 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 100,000 மரக்கன்றுகள் இந்த திட்டத்தின் கீழ் நடப்பட உள்ளன.