28th April 2021 14:55:32 Hours
இன்று காலை (28) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1111 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 1096 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (200) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 198 பேர், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 579 பேர் என கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை (28), இறந்தவர்கள், மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணியின் 98,237 உட்பட நாடு முழுவதிலுமான கொவிட் தொற்றாளர்களின் மொத்தம் எண்ணிக்கை 103,486 ஆகும் 94,856 முழுமையாக சுகமடைந்து இதுவரை வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். எஞ்சிய 7,975 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 279 நோயாளிகள் சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் கொவிட் -19 இறப்பு எண்ணிக்கை இன்று (28) காலை 655 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை (28) நிலவரப்படி, 113 முப்படையினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,873 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (28) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசம் , குருநாகல் மாவட்டத்தின் திட்டவெல்லகம, கும்புக்கெடே, நிரவிய மற்றும் நிக்கதலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் அதிகாரிகொட, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள் களுத்துறை மாவட்டத்திலும், கம்பாஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹீரளுகெதர, களுஹங்கல, மற்றும் ஹற்வென்னவத்த கிராம சேவையாளர் பிரிவுகளும், திருகோணமலை மாவட்டத்தில் பூம்புகார் கிராம சேவையாளர் பிரிவும், காலி மாவட்டத்தில் மாவட்டத்தில் இம்பலகொட மற்றும் கட்டுதம்பே கிராம சேவையாளர் பிரிவுகளும், பொலன்னருவை மாவட்டத்தில் சிரிகெத சேவையாளர் பிரிவும் மாத்தலே மாவட்டத்தில் பல்லேகும்புர கிராம சேவையாளர் பிரிவும் தம்புல்ல பொருளாதார மத்திய நிலையம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.