Header

Sri Lanka Army

Defender of the Nation

28th April 2021 21:29:40 Hours

சீனக் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் சேவைத் தளபதிகளை சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன, அரச அதிகாரிகள், சேவைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆகியோருடன் சீன பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் வெயி ஃபெங்கே தலைமையிலான பிரதிநிதிகள் குழு முக்கிய முக்கிய கலந்துரையாடலினை இன்று (28) கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் மேற்கொண்டது.

இந்த கலந்துரையாடலில் கொழும்பு சீன தூதுவர், அதிமேதகு குய் ஜென்ஹோங் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகமயமாதல் உள்ளிட்ட பல வழிகளில் சீனா இலங்கை வரலாற்று நட்பு நாடாக இருந்தது என்றார். இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐநா மனித உரிமைகள் தீர்மானத்தின் போது சீன அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்ட சமீபத்திய ஆதரவு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

"நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை அதிக அளவில் மேம்படுத்துவதற்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என குறிப்பிட்டதுடன் ஜெனரல் ஃபெங் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராணுவ உறவுகளையும் எடுத்துரைத்தார்.

அதன்பிறகு, ஜெனரல் ஃபெங் இலங்கையின் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகமும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிறுவுனத் தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரிய ஆகியோரின் அமைப்பை ஏற்று திறந்துவைத்தார்.

இரு நாடுகளுக்கிடையில் இராணுவ உதவி நெறிமுறையின் அதிகாரப்பூர்வ கையொப்பமும் ஒரே சந்தர்ப்பத்தில் நடந்தது. பாதுகாப்பு செயலாளரும், முப்படை தளபதிகளும் சீன பிரதிநிதிகள் குழு தலைவர் ஜெனரல் ஃபெங்குடன் நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாள நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்,

இராணுவ மக்கள் விடுதலை திணைக்கள பிரதி இணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷாவோ யுவான்மிங், மத்திய இராணுவ ஆணையகத்தின் (சி.எம்.சி) சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி குவேய், மத்திய இராணுவ ஆணையகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷென் பாங்வ், பி.எல்.ஏ. தென் பிராந்திய உதவி கட்டளைத் தளபதியும் சீன பாதுகாப்புமான மேஜர் ஜெனரல் ஹு சியான்ஜுன் சீன பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஸ்ட கேணல் வான் டோங் ஆகியோரும் இருதரப்பு கலந்துரையாடலின் போது கலந்து கொண்டனர்.