27th April 2021 10:34:33 Hours
71 வருட வரலாற்று பதிவைக் கொண்ட பெருமைமிகு இலங்கை இராணுவ பொலிஸ் படை பொல்ஹெங்கொட தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) தனது தனிப்பட்ட அருங்காட்சியகத்தை நிறுவியதன் மூலம் அதன் பாரம்பரியத்தை பாதுகாத்தது.
படையணி தினத்திற்கு (ஏப்ரல் 22) இணையாக அதன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் இந்த நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு புதிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இது இராணுவ பொலிஸ் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் கட்டப்பட்டது.