27th April 2021 22:41:17 Hours
இராணுவத்தில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் போற்றப்படும் படைகளில் ஒன்றான இலங்கை பீரங்கி படை தனது 133 வது ஆண்டு நிறைவை விழா நிகழ்வு பனகொடா படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) நினைவுகூறலுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டு போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இலங்கை பீரங்கிப் படையின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் அழைப்பின் பேரிலேயே இராணுவ தளபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
ஆயுத படையினரின் விழாவில் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு சிறப்பு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, பிரதம அதிதியுடன் பீரங்கி படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் மேற்படி கௌரவம் செலுத்தப்பட்டது. தேசிய கீதம், படையணியின் கீதம், மத அனுட்டானங்கள் என்பவற்றின் பின்னர் பிரதம அதிதிக்கு கௌரவம் செலுத்தப்பட்டதையடுத்து போர் வீரர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் இலங்கை பீரங்கிப் படையின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களினால் பிரதம அதிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவான கௌரவம் வழங்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து இந்நிகழ்வில் தளபதியின் மலர் அஞ்சலியை தொடர்ந்து இலங்கை பீரங்கிப் படையின் படைத்தளபதி, ஓய்வு பெற்ற படை உறுப்பினர்கள் சார்பாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) எல்சீஆர் குணவர்தன, , பீரங்கிபடை பிரிகேட் தளபதிகள், பீரங்கிப் படையின் நிலையத் தளபதி, பீரங்கி படையணிகளின் கட்டளை அதிகாரிகள், இலங்கை பீரங்கிப் படை பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் படைப்பிரிவின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஆகியோரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நினைவு தூபியில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களை பார்வையிட்டதுடன் தேனீர் விருந்துபசாரத்தின் போது பீரங்கிப் படையின் படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடன் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.