26th April 2021 06:04:23 Hours
பெரும்போக சோள உற்பத்திக்கு பொது மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குட்டிகல முதலாவது இலங்கை இராணுவ பொது சேவை படையணி விதை உற்பத்தி செய்யும் திட்டத்தை எம்பிலிபிட்டிய விவசாய சேவைகள் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டிய விவசாய பணிப்பக அதிகாரிகளுடன் இணைந்து சனிக்கிழமை (17) ஆரம்பித்து வைத்தது.
இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு-நவ ரட்டக்' எனும் எண்ணக்கருவுக்கு அமைய, முகாம் வளாகத்தில் பெரும்போக சோள நடுகை திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் சிறந்த உயர்தர விதைகள் முகாம் வளாகத்தில் நாட்டப்பட்டது.
இலங்கை இராணுவ பொது சேவை படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துன்முல்லவின் அறிவுறுத்தலின் பேரில் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ்.தெமுனி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
குட்டிகலாவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் மீளிணைப்பு கட்டளை அதிகாரி மேஜர் B.I.S.S.C வீரகோன் அவர்களால் குட்டிகலயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் மேற்படி திட்டத்துக்கு இராணுவத்தின் பங்களிப்பை பாராட்டியதுடன் பயிரிடுதலுக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார்.
படஹத பிரதி விவசாய பணிப்பாளர் (விதைகள் மற்றும் பயிற்றுவிப்பு முறைமைகள்) இத்திட்டத்தை மேற்பார்வை செய்தார்.