Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2021 19:56:00 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி அதன் 31 வது படையணி தினத்தை கொண்டாடுகிறது

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 31 வது படையணி தின நிகழ்வுகள் வியாழக்கிழமை (22) பொல்ஹேன்கொடவில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணித் தலைமையகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவ பொலிஸ் டையணியின் படைத் தளபதியும் வழங்கள் கட்டளை பிரிவுத் தலைமையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் கலந்துகொண்டதுடன் அவருக்கு படையணியின் நிலையத் தளபதி கேணல் லக்‌ஷ்மன் பமுனுசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனைடுத்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், படைப்பிரிவு தினத்துக்கான அணிவகுப்பு மரியாதையும் வழங்கினர். .

அதனையடுத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதன் பின்னர் பிரதம அதிதி அதிகாரவாணைற்ற அதிகாரிகள், சார்ஜன்களுக்கான விருந்தகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் படையினருக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

அதனைடுத்து இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்கள் படையணியின் படைத் தளபதியின் அழைப்பின்பேரில் அனைத்து பதவி நிலைகளுக்குமான மதிய உணவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையின் தளபதி, இலங்கை ஒழுங்கு நடைமுறை மார்ஷல், நிலையத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், படைப்பிரிவு சார்ஜன் மேஜர்ஸ் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.