24th April 2021 07:01:37 Hours
பயன்பாட்டு தகவல் தொழில்நுட்ப பாடநெறி எண் – 12 ஐ நிறைவு செய்த இராணுவ தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் சிப்பாய்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இராணுவ வழங்கல் கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்த பாடத்திட்டதில் 53 வது படைப்பிரிவைச் சேர்ந்த 35 அதிகாரவாணை அற்ற அதிகாரிகள் மற்றும் இராணுவ வழங்கல் கல்லூரியை சேர்ந்த அதிகாரவாணை அற்ற அதிகாரிகள் ஐவரும் கலந்துகொண்டதுடன், 553 வது ரிகேட்டின் 6 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் சாதாரண சிப்பாய் கே.எம்.செனவிரத்ன முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இப்பாடத்திட்டம் இராணுவ தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் பயிற்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்களால் நடத்தப்பட்டது.
பாடநெறியின் நிறைவு நாளன்று இராணுவ வழங்கல் கல்லூரியின் நிரந்தர ஊழியரும் கலந்துகொண்டார்.