Header

Sri Lanka Army

Defender of the Nation

24th April 2021 14:27:30 Hours

21 வது படைப்பிரிவின் படைத் தளபதி கடமைகளை ஆரம்பிக்கிறார்

அனுராதபுராவின் ரணசேபுராவில் உள்ள 21 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதியாக புதிதாக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் மொஹான் ரத்நாயக்க அவர்கள் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் புதன்கிழமை (21) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது புதிய படைத் தளபதிக்கு பொதுப் பணி கேணல் நலீன் வீரகோண் மற்றும் நிர்வாக மற்றும் விடுதிகள் அதிகாரியுமான கேணல் ஜகத் வீரகோன் ஆகியோரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவருக்கு பாதுகாவலர் அறிக்கையில் மரியாதை வழங்கி கௌரவம் செலுத்தப்பட்டதுடன், செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.

பின்னர் புதிய தளபதி தனது பதவியினை பொறுப்பேற்கும் முகமாக படைப்பிரிவு வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றையும் நாட்டி வைத்ததோடு, குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கட்டுப்பாட்டு அலகுகளின் தளபதிகள், படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் , சிப்பாய்கள்,கட்டளை அதிகாரிகள் என பலரும் பங்குபற்றினர்.