24th April 2021 20:27:30 Hours
கொவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை (22) யாழ். போதனா வைத்தியசாலை வளாகம், பஸார் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நகரத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையா தொற்று நீக்கம் செய்யும் பணிகளை யாழ் படையினர் ஆரம்பித்தனர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் தொற்று நீக்கம் செய்வதற்கான உபகரணங்களின் உதவியுடன் வைத்தியசாலை நோயாளர் தங்கும் அறைகள், சுற்றுசூழல், வீதிகள், சன நெரிலசான பகுதிகளை சில மணி நேரங்களில் தொற்று நீக்கம் செய்தனர்.