23rd April 2021 09:29:25 Hours
இலங்கை இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளரும், பொறியியல் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்களின் வழிகாட்டலுக்கமைய, ஏப்ரல் 19-23 வரையான தினங்களில் மெத்தேகொடவிலுள்ள மாநாட்டு மண்டத்தில் 'கட்டுமான திட்ட முகாமைத்துவம்' தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இராணுவ கட்டுமான பணிகள், தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள் பிற தேசிய மற்றும் பிரதேச கட்டுமானங்களுக்கு பணிகளில் இராணுவத்தின் பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டதுடன், ஷப்பர் அதிகாரிகளின் கட்டுமான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகவும் இப்பயிற்சிகள் அமைந்திருந்தன.
இந்த பட்டறை இராணுவ மற்றும் இராணுவம் சாராத திட்டங்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அவசியமான கோட்பாட்டு ரீதியான அறிவை வழங்குவதாக அமைந்திருந்துடன், திரு. பிரசாத் பெரேரா தலைமையிலான நெக்ஸ்டெக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நன்கு அனுபவம் வாய்ந்த வள பணியாளர்கள் குழுவின் இந்த பாடத்திட்டம் வடிவமைத்திருந்தது.
இந்த பட்டறையில் விரிவுரைகள் சிறந்த கள பணியாளர்கள் குழுவால் பரந்த அனுபவமும் அறிவும் பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன், விரிவுரைக் குழுவில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் மொரடுவை பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் தொழிற் துறை வல்லுநர்களும் கலந்துகொண்டனர்.
கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த பட்டறை நடத்தப்பட்டது.