24th April 2021 09:01:37 Hours
இராணுவ தளதிபதியின் 2020 – 2025 வைரயான காலப்பகுதிக்கான மூலோபாய முன்னோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் பணியாற்றும் சிவில விவகார அதிகாரிகளுக்காக ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட செயளமர்வின் இறுதியில் (ஏப்ரல் 20 – 22) டின்னர்ஸ் கிழப் செயளமர்வானது, ஊளவியல் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் ஆகிய இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட பதில் சொலிஸ்டர் ஜெனரல் திரு நரீன் புள்ளே, டின்னர்ஸ் கழக அவமர்வின் போது ‘பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவு (அத்தியாயம் 40) சிறப்பு மேற்கோள்களுடன் பாதுகாப்பு படைகளின் அதிகாரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ’ என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.
குறித்த அமர்வுகளில் இடையிடையே கேள்வி பதில் பகுதிகளும் இடம் பெற்றதுடன், சிவில் மற்றும் பொது சமூகம் சார்ந்த செயற்பாடுகளின் போது அதன் மீதான அக்கறை மற்றும் அதற்குள் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்பன பற்றியும் திவுபடுத்தப்பட்டன.
இதன் போது உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ.டபிள்யூ.ஏ.ஏ. செனவிரத்ன அவர்களுடன் இராணுவ தலைமையகத்தின் சில அதிகாரிகள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.