Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2021 16:01:29 Hours

சிறிமெட் குழுவின் நடவடிக்கைகளுக்கான ஒத்திகை

இலங்கை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சிறிமெட் II ஆம் நிலை வைத்தியசாலையின் குழுவின் நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல் ஒத்திகை நிகழ்வு ஏப்ரல் (8) ஆரம்பமானது.

மேற்படி பயிற்சியில் நான்கு விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடங்களாக வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் வான்வழி நோயாளி காவு குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்குக் கொண்டனர்.

அமைதி காக்கும் பணிகளின் பாதுகாப்புக் கடமைகளின் போது துப்பாக்கிச் சூட்டில் தலை, நெஞ்சு மற்றும் வயிற்று காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் அத்தோடு வாந்தி மற்றும் ஏனைய பொது அவசரநிலைகளில் சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சிகள் இடம்பெற்றன.

தென் சூடானிலுள்ள சிறிமெட் II நிலை வைத்தியசாலையின் கடமைகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் அமைதிகாக்கும் பணிகளுக்கு மத்தியில் தேநீர் விருந்துபசாரத்துடன் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வினையும் கொண்டாடினர். அங்கு இராணுவத் தளபதியின் புத்தாண்டு செய்தியும் வாசிக்கப்பட்டது.

இது அமைதி காக்கும் படையினர் சோர்வு மனநிலையிலிருந்து புத்துணச்சி பெறவும் புத்தாண்டு பருவகால நிகழ்வுகள், சம்பிரதாய நிகழ்வுகள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி உரை நிகழ்த்தியதுடன் தளபதியின் புத்தாண்டு செய்தியுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.