Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2021 18:03:28 Hours

55.7 மி. பெறுமதியான 185 கிலோ கஞ்சா மீட்பு

மன்னார் 54 படைப்பிரிவின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (20) அதிகாலை 55.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான 185 கிலோ கேரள கஞ்சா அடங்கிய 86 பொதிகள் பூநகரி பள்ளிகுடா பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா தொகை விடத்தல் தீவு பகுதிக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுமென ஆரம்பத்தில் உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையாக இருந்தமையால் கடத்தல்காரர்கள் தரையிறங்கும் பகுதி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்தனர்.

எவ்வாறாயினும், அவதானத்துடன் இருந்த படையினர் விடத்தல் தீவு பகுதியில் கடத்தல்காரர்கள் தரையிறங்கவிருப்பதை அறிந்துகொண்ட படையினர் தந்திரோபாயங்களை பயன்படுத்து அப்பகுதியை சுற்றிவளைத்து கரையோரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகையினையும் மீட்டனர்.

படையினரால் மீட்கப்பட்ட 55.5 மில்லியன் பெறுமதியான 86 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டிருந்ததுடன், அவை மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி விஷேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா தொகையுடன் எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் பெருந்தொகையான கடத்தல் கஞ்சா, மஞ்சள், போதைப்பொருட்கள் என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.