20th April 2021 23:55:43 Hours
சிங்கள , தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரமும் இராணுவ தளபதியின் உரையும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
புத்தாண்டு நிகழ்வானது பாரம்பரிய அம்சங்களுடனும் பிரதம அதிதியின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் இராணுவ பதவி நிலைப் பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி, பதவி நிலை பிரதானிகள், பொதுப் பணி பணிப்பாளர் நாயகம், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆற்றிய உரையில் நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் பிற சேவை ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுத்த பன்முக சேவைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கொவிட் - 19 வைரஸ் பரவல் உக்கிரமடையும் முன்பே அதனை கண்டறிவதற்கான பணிக்குழுவை நியமித்திருந்ததாகவும், அந்த குழுவில் வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத போதிலும் இராணுவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தந்திரோபாயமான செயற்பாடுகளின் கீழ் கடந்த ஒன்றரை வருட காலமாக நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோட்டு நோய் கட்டுப்பாட்டிற்கான உபாயங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியிருந்தோடு தொற்றுநோயை முற்றாக ஒழிப்பது தொடர்பான விடையத்தில் இராணுவம் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளதெனவும் அந்த உண்மையை நினைவில் கொள்ள தவறக்கூடாதென்றும் தெரிவித்தார்.
பொது மக்களுடன் நெருக்கமாக பலகும் ஒரு அமைப்பு என்ற வகையில் ஒழுக்கமானதும் துணிச்சலானதுமான ஓர் கட்டமைப்பாக இராணுவத்தினர் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். குறிப்பாக இராணுவம் எப்போதும் முதுகெலும்புடன் செயற்படும் ஆற்றல் மிக்க பணியாளர்களை கொண்ட அமைப்பாக செயற்பட்டு வருவதால் படையினர் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து தொற்று நோயிக்கு ஆளாகாமல் பாதுகாப்பு பெற வேண்டியவராகவும் இருப்பது அவசியமெனவும் தெரிவித்தார். ஒரு போதும் வெற்றிக் கொள்ள முடியாதென கூறப்பட்ட 3 தசாப்தகால யுத்தத்தை இராணுவத்தால் வெற்றிகொண்டிருந்தாலும், கட்டுக்கோப்பான நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் தொற்று நோயை மீண்டும் உருவாக்க கூடும் என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
"தலைமையகத்தில் உள்ள அனைத்து இராணுவ வீரர்களும் கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவோரும் 22 மில்லியன் மக்கள்தொகையில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே கடந்த காலங்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் புத்தாண்டில் திறம்பட முன்னேற்றங்களை நோக்கி நகர முடியுமென நம்பப்படுவதாகவும் தேசத்துக்காகவும், நாட்டிற்காகவும் தம்மை அர்பணித்து செயற்பட தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இராணுவத்தின் 2020 – 2025 மூலோபாய முன்நோக்குத் திட்டத்தின் கீழ் மாற்றங்களை ஏற்படுத்தி ஓரு கௌரவமான தொழில் அமைப்பாக திகழ முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
அத்தோடு ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் உரையின் போது போரில் உயிர் நீத்த வீரர்கள், காயமடைந்த வீரர்களை நினைவுகூறவும் மறக்கவில்லை. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். அத்தோடு இராணுவத்தில் தங்களுக்கான அலுவலகங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தளபதி நன்றிகளை கூறிக்கொண்டார். மேலும் சகலருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய பின்னர் இராணுவத் தளபதி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வின் நிறைவம்சமாக அனைத்து நிலையினருனடனும் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள நேரம் ஒதுக்கிக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.