Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2021 15:03:28 Hours

பங்களாதேஷில் படையினர் பயிற்சியில்

பங்களாதேஷ் இராணுவத்தின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவத்தின் 30 படையினர் ஏப்ரல் 4-12 ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெற்ற சாந்திர் ஒக்ரிஷேனா -2021’ (சமாதானத்துக்கான முன்னோடி) எனும் பயிற்சியில் பங்கேற்றனர்.

சுதந்திர பங்களாதேஷின் பொன்விழாவினையும், அந்நாட்டின் தேசப்பிதாவான பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூறாவது பிறந்த நாளை அனுட்டிக்கும் வகையிலும் வலுவான அமைதிகாக்கும் பணிகள், சீரற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளல். பொது மக்கள் மற்றும் படையினரை காத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய பயிற்சி நெறியில் யமுனை நதிக் கரையில் காணப்படும் படை முகாமில் பங்குப்பற்றினர்.

மேற்படி பயிற்சிகளில் இலங்கை இராணுவத்தின் 5 அதிகாரிகள் மற்றும் 25 சிப்பாய்கள் பங்கேற்றதுடன் மூன்று எண்ணக்கருக்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்த பயிற்சிகளில் பூட்டான், இந்திய, இலங்கை மற்றும் பங்களாதேஷ் இராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர், சவுதி அரேபியா, அமெரிக்கா, நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கையை சேர்ந்த 11 இராணுவ சிப்பாய்கள் இந்த பயிற்சியில் கலந்துக்கொண்டனர்.

பல் துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் உறுப்பினரான பங்களாதேஷ் ஷேக் முஜிபுர் ரஹ்மானை நினைவுகூர்ந்ததுடன் அவர் உலக அமைதிக்கான பேரவையின் ஜோலியட்-கியூரி விருதை 1973 இல் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இராணுவத் தளபதி ஜெனரல் அஜிஸ் தலைமையில் அந்நாட்டின் அனைத்து படைகளினதும் பங்கேற்புடனும் வண்ணமயமான அணிவகுப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்ப விழாவில் இந்திய இராணுவ தளபதி, ரோயல் பூட்டான் இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி மத்திய ஆபிரிக்க ஐ.நா அமைதி காக்கும் படைகளின் படைத் தளபதி மற்றும் மாலி ஐ.நா அமைதி காக்கும் படைகளின் படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதி நாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா வருகை தந்திருந்ததுடன், பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.