Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2021 15:53:17 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி காரியாலய பதவி நிலைப் பிரதானி பணிகளை ஆரம்பித்தனர்

இலங்கை இலேசாயுத காலாட்படையின் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள பாதுகாப்பு பதவி நிலைப் பிரதான் காரியாலயத்தின் பதவி நிலை பிரதானியாக திங்கட்கிழமை (19) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பணிகளை ஆரம்பித்தார்.

மத அனுட்டானங்களுக்கு மத்தியில், அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் ஊழியர்களால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அவர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் புதிய பதவியினை ஏற்றுக்கொள்வதற்கு முன்பதாக பதவி நிலை பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றினார்.

அண்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பல்லவெலாவின் வெற்றிடத்திற்காக அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.