Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2021 21:54:25 Hours

அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு ஆவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன், இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் , கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவை இன்று (20) சந்தித்தார்.

அன்பான வரவேற்புக்குப் பின்னர் இருவரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பொதுவான விடயங்கள் மற்றும் இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது தனிப்பட்ட அழைப்பிற்கு வருகைத் தந்தமைக்கும் பயிற்சி மற்றும் பொது விடயங்களுக்கான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். நல்லுறவு கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆவுஸ்திரேலிய தூதருக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.