20th April 2021 19:42:04 Hours
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடி நோய் தடுப்பு நடவடிக்கைகள், புதிய போக்குகள், உலகளாவிய பரவல் நிலைமைகள், நோய் பரவலின் ஆரம்பம் தொடர்பிலான தேடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்தனர். இச்சந்திப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் தலைமையில் நேற்று (19) இடம்பெற்றது.
சந்திப்பின் ஆரம்பத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறிய கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் இடைவிடாது கைகோர்த்துக் கொண்டிருப்போருக்கு நன்றிகளையும் கூறினார். இதன்போது பொதுமக்களின் செயற்பாடுகள், நாட்டின் பொருளாதார மேம்பாடு, கல்வி, பொருளாதாரம், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான படிமுறைகள் பற்றியும் கட்டாயமாக பின்னபற்றப்பட வேண்டிய சுகாதார செயன்முறைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு அண்மைய நாடுகளிலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் பரவலடைந்து வரும் நிலைமை குறித்தும், நடைமுறையிலிருக்கும் சுகாதார செயன்முறைகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்க, இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையின் தலைவர் திருமதி கிரிமாலி பெர்ணான்டோ, மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் சுகாதார அமைச்சின் கொவிட் – 19 விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு பொறுப்பதிகாரி, வைத்தியர் ரோஹித முத்துகல , சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர் நதீக ஜானகே, தலைமை தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர, வைரஸ் பரவல் தொடர்பிலான நிபுணர் ஜானகி அபேநாயக்க, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் ஹசித திசேர, சிரேஸ்ட தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சமித் கிணிகே, கீலேய் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீடத்தின் பேரசிரியர் அதுல சுமதிபால, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசியர் நீதீக மாலவிகே, உலக சுகாதார ஸ்தாபகத்தின் விஷேட பிரதிநிதி வைத்தியர் பாலித அபேகோன், இராணுவ ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன, கேணல் சவீன் சேமகே, ஜனாதிபதியின் பொது சுகாதார விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் திரு எம்ஜி உபுல் ரோஹன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.