Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2021 12:46:41 Hours

இராணுவத்தினரால் பாடசாலை மதில் மீளமைப்பு

மன்னார் தேவன்பிடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில், 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினரால் பாடசாலையின் முன் மதில் மற்றும் வெளியரங்கு என்பவற்றின் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்பட்டதுடன் அவற்றை பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவன்று (ஏப்ரல் 9) மாணவர் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.

65 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் 651 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வில் 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டின் கேணல் வசந்த செனவிரத்ன மற்றும் மேடையினை சிறப்பாக அலங்கரித்த லான்ஸ் கோப்ரல் ஏ.பி.எஸ் அமரசிங்க ஆகியோர் அவர்களது சேவைக்காக பாடசாலை சமூகத்தினால் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ வருகைத் தந்திருந்து பரிசில்களை வழங்கி வைத்ததுடன் இராணுவத்தின் சேவைக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.