Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2021 14:54:45 Hours

யாழ்ப்பாண படையினர் மற்றும் பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டு அம்சங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கட்டாயமான சுகாதார நடைமுறைகளுடன் கூடியாதான தமிழ் , சிங்கள புத்தாண்டு விழா நிகழ்வுகள் சிவில் - இராணுவ பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றதுடன், பொது மக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுடன் இணைந்து பாரம்பரிய புத்தாண்டு நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஏனைய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்போது பண்டிகை காலத்தில் குடும்பத்தாரிடமிருந்தி விலகியிருந்து அர்ப்பணிப்பான சேவையில் ஈடுபட்ட படை வீரர்கள் தொடர்பில் சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டதுடன், படையினரும் பொது மக்களும் ஆர்வத்துடன் நிகழ்வில் பங்கேற்று ஒற்றுமையை வெளிப்படுத்தினர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் ஒரு அம்சமாக புத்தாண்டுக்கான ஆண் அழகன், அழகிகளை தெரிவு செய்யும் போட்டி இடம்பெற்றதுடன் அதனால் குறித்த நிகழ்வு வண்ணமயமானதாக அமைந்திருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கலந்துகொண்டதோடு, நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குமான பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், தலைமையக கட்டுப்பாட்டு அலகுகளின் படையினர் என பலரும் கலந்துகொண்டனர். Running sneakers | Nike Off-White