13th April 2021 20:21:30 Hours
இலங்கை பூப்பந்து பயிற்றுவிப்பு மற்றும் ஊக்குவிப்பு குழுவின் பிரதித் தலைவர் திரு தீபால் மதுரப்பெரும அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுரைக்கமைய வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் புதிய பூப்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கான பயிற்சிகள் ஏப்ரல் 6 – 7 ஆம் திகதிகளில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், 40 பயிற்சியாளர்களின் பங்கேற்று உடற் பயிற்சி மற்றும் பூப்பந்து பயிற்சி என்பனவற்றை பெற்றுக்கொண்டனர். மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அழைக்கப்பட்டிருந்தார்.
வடக்கு மாகாண பூப்பந்து வீரர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வட. மாகாண பூப்பந்து சங்கத்துடன் இணைந்து இந்த பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதனால் சிறந்த இலக்குகளை அடைவதற்கான திறன்களை அவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு படையினர் உதவியளித்தனர்.
வட. மாகாண பூப்பந்து சங்கத்தின் தலைவர் வண. என்.ஜே.ஞானப்பொன்ராஜ், செயலாளர் திரு எம்.ஜே.எஸ். பிரின்ஸ்லி லம்பேர்ட் மற்றும் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள், 573 பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும, 571 பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் இராணுவ அதிகாரிகளும் மேற்படி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். trace affiliate link | Autres