18th April 2021 07:54:00 Hours
வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதியின் பரிந்துரைக்கமைய 563 வது பிரிகேட் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் உள்ள கோகெலியா ரணவிரு கிராமங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை ஏப்ரல் 09 ம் திகதி கோகெலியா ஸ்ரீ போதிமலு விஹாரையில் 563 பிரிகேட் தளபதியின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.
56 வது படைப்பிரிவு மற்றும் 563 பிரிகேட் சிவில் விவகார அதிகாரிகள் , 21 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்படி நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வானது 4 மணி நேரம் இடம்பெற்றிருந்துடன் பொது மக்கள் தங்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்ததுடன் காணிப் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இதன்போது கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பொதுமக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமர்வொன்று விரைவில் நடைபெற உள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது. Mysneakers | Nike