18th April 2021 22:35:25 Hours
563 வது பிரிகேட்டிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, போகஸ்வெவ சபுமல்கஸ்கட ராஜமஹா விஹாரையின் துறவிகள் வாசஸ்த்தலத்திற்கான (அவாசகேயா) கான்கிரீட் கூரை அமைக்கும் பணிகளுக்கு அதிகாரிகள் உட்பட இராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (12) ஒத்துழைப்பு வழங்கினர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் 56 வது படைப்பிரிவு தளபதியின் கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ் 563 வது பிரிகேட்டின் 7 இலங்கை சிங்கப் படையின் படையினர் இப்புராதன விகாரையின் சுமார் 1800 சதுர அடி கொண்ட ஆவாசகேயவிற்கான கான்கிரீட் கூரைக்கான சீமெந்து கலவையை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக உதவியினர் உள்ளது. சுமார் ஐந்து மணி நேரம் கூட்டு சிரமதானப் பணி பொறியியலாளர்கள் மற்றும் பிரதம துறவியின் திருப்தியுடன் முடிவுக்கு வந்தது.
563 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் பாண்டுக பெரேரா, சிவில் விவகார அதிகாரி, 7 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி, 56 வது படைப்பிரிவு பொறியிலாளர் சேவை படையின் கட்டளை அதிகாரி தனது தொழில்நுட்ப ஊழியர்களுடன் பங்கேற்றனர். affiliate tracking url | adidas