16th April 2021 12:07:06 Hours
மத்திய பாதுகாப்பு படையினரால் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 18 மணி நேரத்திற்கும் மேலான தேடல் நடவடிக்கைகளுக்குப் பின்னர் காலை 11.00 மணியளவில் ஹல்துமுல்ல வேலு ஓயா நீரோடையில் அடித்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனின் சடலங்களை கண்டுபிடித்தனர். ஹல்தும்முல்ல, கலுபஹன வெலு ஓயா நீரோடையில் வியாழக்கிழமை (15) மாலை தந்தை மகன் மற்றும் மகளுடன் நீராடும் போது ஆற்றில் திடீர் வௌ்ள பெருக்கின் காரணமாக அடித்து செல்லப்பட்டனர்.
இவர்கள் மாஹரகம பிரதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் புத்தாண்டு விடுமுறைக்காக பதுளைக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் வெலு ஓயாவில் குளிப்பதற்காக நிறுத்தியுள்ளனர். தாய் தின்பண்டங்களை வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் தாய் திரும்பி வருவதற்குள் நீராடுவதற்காக ஆற்றில் இறங்கிய வேளை மூவரும் நீரில் திடீரென அடித்து செல்லப்பட்டனர்.
இருப்பினும், பொதுமக்களின் உதவியுடன் மகளின் உயிர் காப்பாற்ற முடிந்ததுடன் அவரது தந்தை மற்றும் சகோதரன் சம்பவ இடத்திலிருந்து கடும் மழையின் காரணமாக மலைப் பாங்கான பகுதியில் தொலைதூரத்திற்கு அடித்துச் செல்லப்படிருந்தனர்.
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் மத்திய பாதுகாப்பு படையினரால் வியாழக்கிழமை (15) மாலை முதல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. அவர்கள் இருவரும் தாழ்வான பகுதிக்கு நீரில் அடித்து செல்லப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் படையினர் 18 மணிநேர தொடர்ச்சியாக தேடல் நடவடிக்கையினை இன்று (16) காலை வரை மேற்கொண்டனர்.