16th April 2021 16:55:11 Hours
கிளிநொச்சி முன்னரங்கு பாராமரிப்பு பிரதேச படையினர் அதன் கட்டுப்பாட்டு வழங்கல் அலகுகளின் ஒத்துழைப்புடன் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தை அண்டியுள்ள கிராமங்களின் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், வறுமையில் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை 11 ம் திகதி ஏப்ரல் மாதம் 2021 வழங்கினர்.
கிளிநெச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் பரிந்துரையின்படி கிளிநொச்சி முன்னரங்கு பாராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பியால் நானாயக்காரவசம் மற்றும் அவரது கட்டளையின் கீழுள்ளள படையினர் தங்கள் சொந்த நிதி பங்களிப்புக்களுடன் புதுவருடத்தினை முன்னிட்டு அந்த உலர் ரேஷன் பொதிகளை இலவச விநியோகத்தனர்.
படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது வறுமையில் வாடுபவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பதும், அப்பகுதி மக்களின் நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமை ஆகியவற்றினை பராமரிப்பதும் ஆகும்.
அனைத்து கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த உலர் உணவு பொதிகளை விநியோகிக்க நன்கொடையாளர்களைக் இணங்காண்பதற்கு பங்களித்தனர், மேலும் படையினரின் ஆதரவுடன் ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் குறித்த பெறுநர்களின் வீட்டுக்கு சென்று வழங்கப்பட்டன.
கர்ணல் கிளிநொச்சி முன்னரங்கு பாராமரிப்பு பிரதேசம், கர்ணல் சமன் சுமனசிங்க, கிளிநொச்சி முன்னரங்கு பாராமரிப்பு பிரதேச தலைமையகத்தின் பணியாளர்கள், 5 இலங்கை இராணுவ பொலிஸ் படை கட்டளை அதிகாரி, 7 வது இலங்கை இராணுவ சேவை படை கட்டளை அதிகாரி, கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையின் தலைமை வைத்தியர், 6 இலங்கை போர் கருவிகள் படையின் கட்டளை அதிகாரி, 7 இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையின் கட்டளை அதிகாரி மற்றும் 11 வது பொறியியலாளர் சேவை படையின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இத்திட்டத்துடன் இணைந்துக் கொண்டனர். Nike footwear | nike air max 95 obsidian university blue book list