13th April 2021 04:00:22 Hours
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் புதன்கிழமை (07) கிளிநொச்சியில் உள்ள முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படைத் தலைமையகம் மற்றும் விநியோக கட்டளைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட தளபதியை கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையக படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியால் நாணயக்காரவசம் அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி அவருக்கு மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர், மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க முன்னரங்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள அலகுகளுக்கு சென்று நிர்வாக மற்றும் ஏனைய விடயங்களை தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படைத் தலைமையக அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச பதை தலைமையக தளபதி வரவேற்புரை நிகழ்த்தினார், அத்துடன் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படைத் தலைமையக மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் மத்திய்யில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் 6 வது இலங்கை போர் கருவி படையணி, 7 வது இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 11 வது பொறியியல் சேவை படையணி, 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 7 வது இலங்கை இராணுவ சேவை படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.