13th April 2021 04:15:22 Hours
துனுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள 65 வது படைப் பிரிவு தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை (08) சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில், இரண்டு பிரதேச செயலாளர்கள் , சுகாதாரத் துறை, சுகாதார வைத்திய அலுலகம், வன அலுவலகம், விவசாய அலுவலகம், நீர்ப்பாசன அலுவலகம், அனர்த்த முகாமைத்துவ அலுவலகம், பொலிஸ் மற்றும் வங்கி துறையை சேர்ந்த 34 பேர் கலந்து கொண்டதுடன், 65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க அவர்களின் தலைமையில் சிவில்-இராணுவத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் படைப் பிரிவின் தளபதி அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் வரவேற்றதுடன், மேற்கூறிய விடயங்கள் தொடர்பாக அனைத்து படையினரும் நடத்திய முந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன. பின்னர் இவ் விரிவுரையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.
இவ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு படைத் தலைமையகங்களின் துறை தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், பேரழிவு அச்சுறுத்தல்கள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன.