16th April 2021 13:40:11 Hours
சொத்து முகாமைத்துவ பணிப்பகமானது கடைகளை அவ்வப்போது கணக்காய்வு செய்தல் நடைமுறைகள் மற்றும் சோதனை அதிகாரியின் அறிக்கை தயாரித்தல் தொடர்பான ' நிதி 127' பற்றிய விழிப்புணர்வு விரிவுரைகளை ஏழு பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் நடத்தியது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பொதுப் பதவி நிலை பணியாளர் கிளையின் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாடு பூராகவுமுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இந்த பட்டறைகளை நடத்த சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி முயற்சி எடுத்திருந்தார்.