16th April 2021 18:53:59 Hours
ஹசலகாவில் உள்ள மினிபே எல பகுதியில் மதுபோதையில் காடுகளை நோக்கி கால்வாய் வழியாகபயணித்த 11 பேர் காணாமல் போனதையடுத்து, விசேட படையினருடன் 10 வது கஜபா படையணியின் படையினர் இணைந்து வியாழக்கிழமை (15) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவர்களை மீட்டெடுத்தனர்.
மதுபோதையில் இருந்த குறித்த நபர்கள் அங்கு சென்றபின், கனத்தமழையின் காரணமாகவும் மினிப்பே கால்வாயின் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து அவர்கள் திரும்பி வருவதற்கு இடையூறு விளைவித்தத. இதனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
இந் நிலைமையை கருத்திற் கொண்டு படையினர் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து சென்று கால்வாய்ப் பாதையின் மறுபுறம் சென்று அவர்கள் மரங்களின் கீழ் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த இடத்தை கண்டுபிடித்தனர்.
பெய்த மழையினாலும், நீர்மட்டம் அதிகரிப்பாளும் இவர்கள் வெவ்வேறு திசைகளில் வழி தவறியதாக கூறப்படுகிறது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக ,11 வது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய படையினரால் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் ஐந்து மணி நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், படையினர் அனைவரையும் கண்டுபிடித்து, நீர் வழிகளை தாண்டி தங்கள் குடியிருப்பு இடங்களுக்கு கொண்டு வந்தனர்.